Tuesday, October 8, 2013

Garlic Onion Kara Chutney

Garlic Onion Kara Chutney
  • Big Onion - 1
  • Garlic flakes - 5
  • Red Chillies - 3 to 4
  • Tamarind - a big gooseberry size
  • Oil - 2 teaspoons
  • Salt - 1 teaspoon or as per taste
Method:
First chop the onion into big pieces.
In a frying pan, add oil, red chillies, onion, garlic and tamarind. Fry all the ingredients until a nice aroma comes out. Let it cool for some time and then grind it along with salt.
This chutney goes well with Idli or Dosai.

Friday, October 4, 2013

கை முறுக்கு

சுவையான கை முறுக்கு செய்வதற்கான எளிய செய்முறை குறிப்பு. இந்த குறிப்பு
திருமதி. மல்லிகா பத்ரிநாத் அவர்களின் சமையல் குறிப்பைத் தழுவியது.
தேவையான பொருட்கள் 
  • அரிசி மாவு – 4 கப்
  • உளுத்தம் மாவு – 1/2  கப்
  • மிளகுத்தூள் – 1/2 தேக்கரண்டி
  • சீரகத்தூள் – 1/2 தேக்கரண்டி
  • வெண்ணெய் / நெய் – 200 கிராம்
  • உப்பு – தேவையான அளவு
செய்முறை 
  1. உளுத்தம்பருப்பை வெறும் வாணலியில் வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். வறுத்த உளுத்தம்பருப்பை மிக்ஸ்யில் நன்கு அரைத்து, சலித்துக் கொள்ளவும்.
  2. இதனுடன் அரிசி மாவு, உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  3. நெய்யை ஒரு பாத்திரத்தில் சேர்த்து கையால் நன்கு தேய்த்துக் கொள்ளவும். இதனுடன் மாவு கலவையை சேர்த்து நன்கு பிசறிக் கொள்ளவும்.
  4. மாவை 3 அல்லது 4 பகுதிகளாக பிரித்துக் கொள்ளவும்.
  5. முதலில் ஒரு பகுதி மாவை மட்டும் எடுத்து திக்காக பிசைந்து கொள்ளவும்.
  6. ஒரு ஈரத் துணியின் நடுவில் ஒரு பாட்டில் மூடியை வைத்துக் கொள்ளவும். ஒரு எலுமிச்சம்பழ அளவு உருண்டையை எடுத்துக் கொள்ளவும்.
  7. கட்டை விரல், ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் ஆகிய மூன்று விரல்களைக் கலந்து முறுக்கினை சுற்றவும்.
  8. கட்டை விரலாலும், ஆள்காட்டி விரலாலும் மாவினை சிறிது அழுத்திவிட்டு, பிறகு அதனைத் திருகி திருக்கி பாட்டில் மூடியைச் சுற்றிலும் சுற்றி விடவும்.
  9. இந்த வகை முறுக்கினை மிகவும் மெல்லியதாக சுற்றக் கூடாது. தேவையான அளவிற்கு சுற்றுகளின் எண்ணிக்கையை கூடவோ, குறைத்தோ சுற்றிக் கொள்ளலாம்.
  10. கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் சுற்றி வைத்துள்ள முறுக்கை கவனமாக எடுத்து, எண்ணெயில் இட்டு பொரித்தெடுக்கவும்.
  11. இதே போல் அடுத்த பகுதி மாவை எடுத்து பிசைந்து, சுற்றி, பொரித்து எடுக்கவும்.
  12. சுவையான கை முறுக்கு தயார்.

கொத்துக்கறி உருண்டை குழம்பு

சுவையான கொத்துக்கறி உருண்டை குழம்பு செய்வதற்கான எளிய செய்முறை குறிப்பு.
தேவையான பொருட்கள்
  • கொத்துக்கறி – 500 கிராம்
  • வெங்காயம் பெரியது – 1
  • மிளகாய் வற்றல் – 6
  • வர கொத்தமல்லி – 2 தேக்கரண்டி
  • சோம்பு – 1 தேக்கரண்டி
  • தேங்காய் – 1 கப்
  • கசகசா – 1 தேக்கரண்டி
  • பட்டை – 1 அங்குலம்
  • கிராம்பு – 3
  • ஏலக்காய் – 2
  • முந்திரிப்பருப்பு – 6
  • எலுமிச்சம் பழம் – 1/2
  • முட்டை – 1
  • மல்லித்தழை, புதினா – சிறிதளவு
  • நெய் – 2 தேக்கரண்டி
  • எண்ணெய்  – 3 தேக்கரண்டி
செய்முறை
  1. மிளகாய் வற்றல், வர கொத்தமல்லி, சோம்பு, கசகசா, முந்திரிபருப்பு  ஆகியவற்றை இளம் சிவப்பாக வறுத்துக் கொண்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  2. குக்கரில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு கொத்துக்கறியை தண்ணீரில்லாமல் போட்டு வதக்கிக் கொள்ளவும்.
  3. வதக்கிய கறியை மிக்ஸ்யில் போட்டு லேசாக அடித்துக் கொள்ளவும்.
  4. இதனுடன் அரைத்த மசாலாவில் பாதியை சேர்த்து, முட்டையையும் உடைத்து ஊற்றி நன்றாகக் கலந்து சிறு சிறு உருண்டையாக பிடித்துக் கொள்ளவும்.
  5. அதே குக்கரில் 2 தேக்கரண்டி நெய், 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பட்டை, ஏலக்காய், கிராம்பு, மல்லித்தழை, புதினா, பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கி , எடுத்து வைத்துள்ள மீதமுள்ள  அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  6. இதனுடன் தேங்காய்ப்பால் ஊற்றி நன்றாக கலந்து கொதிக்க விடவும்.
  7. குழம்பு கொதிக்கும்போது செய்து வைத்துள்ள உருண்டைகளை ஒவ்வொன்றாகப் போடவும்.
  8. குழம்பை கிளறாமல் எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும்.
  9. இறக்கியவுடன் எலுமிச்சம்பழசாறு பிழிந்து விடவும்.
குறிப்பு
கொத்துக்கறி உருண்டைகளை தனியே எண்ணெயில் பொரித்தும் குழம்பில் சேர்க்கலாம்.

நன்றி : TAMIL COOK

சுண்டல், ஸ்வீட், காரம்... மிச்சமாகிப் போனால்... வித்தியாசமான டிஷ்!.......... நன்றி : அவள் விகடன்.

நவராத்திரி சமயத்தில்... நாம் செய்தது, அக்கம்பக்கத்தில் கொடுத்தது என்று பலவிதமான சுண்டல்கள் மிகுந்துவிடும். அவற்றை வைத்து என்ன செய்யலாம்?
இனிப்பு இல்லாத சுண்டல் எல்லாம் ஒன்று சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக தண்ணீர் சேர்க்காமல் அரைத்து, பொட்டுக்கடலை மாவு அல்லது ரஸ்க்தூள் சேர்த்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி போட்டு பிசையவும். இந்தக் கலவையை சிறு வடைகள் வடிவத்தில் தட்டி, நான்ஸ்டிக் தவாவில் பரவலாக வைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, சிறிது எண்ணெய் விட்டு இருபுறமும் பொன்னிறமாக வரும் வரை திருப்பி போட்டு எடுக்கவும். வித்தியாசமான, சுவையான, சுண்டல் கட்லெட் ரெடி!
தீபாவளி போன்ற பண்டிகை சமயங்களில் வீட்டில் செய்யும்... உறவினர், நண்பர்கள் வாங்கி வரும் ஸ்வீட், கார வகைகள் தேவைக்கு அதிகமாகி விடும்போது அவற்றை வேறு வகையில் பயன்படுத்த முடியுமா?
காராசேவு, மிக்ஸர், நாடா பக்கோடா, தேன் குழல் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு, பிசைந்து வைத்த கலவையை குணுக்கு போல் கிள்ளி போட்டு பொரிக்கவும். வழக்கமாக செய்யும் குணுக்கைவிட இது மேலும் பிரமாதமான ருசியுடன் இருக்கும்.
ஸ்வீட் வகைகளை எல்லாம் ஒன்று சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். 100 கிராம் கடலைப்பருப்பை வறுத்து வேக வைத்து, தேங்காய் துருவல் சேர்த்து அரைத்துக் கிளறி, பொடித்த ஸ்வீட் சேர்த்துக் கலந்து பூரணம் தயாரிக்கலாம். மைதா மாவை தேவையான நீர் விட்டு பிசைந்து, ஸ்வீட் பூரணம் வைத்து மூடி, போளி தயாரிக்கலாம். இந்த மல்டி ஸ்வீட் போளி ஆளை அசத்தும்.
இஞ்சி அதிகமாக கிடைக்கும் சீஸனில், அதை வாங்கி பக்குவப் படுத்தி வைப்பது எப்படி?
இஞ்சியை இளசாக (நார் இல்லாதது) வாங்கி, மிக்ஸியில் அரைத்து, வடிகட்டி, சிறிதளவு சர்க்கரை, உப்பு சேர்த்து கொதிக்க வைத்து, ஆறியதும் பாட்டிலில் சேமித்து வைத்துக் கொண்டால்... சமையலுக்கு தேவைப்படும்போது பயன்படுத்தலாம். இஞ்சி சாறை கெட்டியாக காய்ச்ச வேண்டியது அவசியம்.
சுகரை கன்ட்ரோலில் வைக்கவும், உடலுக்கு வைட்டமின் சத்து கிடைக்கவும் எளிய உணவு முறை... ப்ளீஸ்!
வெந்தயத்தை வறுத்துப் பொடித்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும் காலையில் எழுந்தவுடன் மோரில் இந்தப் பொடியை கொஞ்சம் சேர்த்து பருகி வந்தால்... சுகர் கட்டுப்படும்.
நெல்லிக்காயை நறுக்கி, வெயிலில் உலர்த்தி பொடித்து வைத்துக் கொள்ளுங்கள். மோரில் நெல்லிப் பொடியை சேர்த்துக் கலந்து அருந்தினால், வைட்டமின் 'சி’ சத்து கிடைக்கும். இது, வயிற்றுக் கோளாறில் இருந்தும் நிவாரணம் அளிக்கும். நெல்லிப் பொடியை தயிரில் கலந்து தலையில் தேய்த்துக் குளித்தால், கூந்தல் நன்கு வளரும்.
டீ தயாரிக்கும்போது டீத்தூள் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டினாலும் பொடி தங்குகிறதே... என்ன செய்வது?
தேவையான அளவு டீத்தூள், ஏலக்காய்... இரண்டையும் கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைத்து, தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, மெல்லிய துணியில் வடிக்கட்டவும். இதை சூடான பாலில் கலந்தால்... அருமையான  ஏலக்காய் டீ ரெடி. டீத்தூளும் தங்காது.
பாட்டிலில் போட்டு வைத்த ஊறுகாய்கள் எல்லாம் பழையதாகி கொஞ்சம் கொஞ்சம் தங்கிவிட்டது... இதை என்ன செய்வது?
சிறிது சிறிதாக மிகுந்த ஊறுகாய் எல்லாம் ஒன்று சேர்த்து மிக்ஸியில் அரைத்து, சிறிது வெல்லம் சேர்த்து, வாணலியில் போட்டு கிளறி ஜாம் போல தயாரிக்கலாம். இதை சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம்.
வீட்டுக்கு வரும் உறவினர், விருந்தாளிகளுக்கு வாசனையான மோர் கொடுக்க... ஒரு ஐடியா தருவீர்களா...?
புதினா, கொத்தமல்லி, இஞ்சி, கறிவேப்பிலையை சுத்தம் செய்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைத்து, ஃப்ரிட்ஜில் உள்ள ஐஸ் ட்ரேயில் வைக்கவும். ஒரு டம்ளர் மோரில் 2 ஐஸ் க்யூப், சிறிதளவு உப்பு போட்டுக் கலக்கினால்... அருமையான, கமகம மோர் தயார்
முருங்கை மரம் பூத்து குலுங்குகிறது அவ்வளவு பூவும் காயாகாது. முருங்கைப்பூவை சமையலில் பயன்படுத்தலாமா?
முருங்கைப் பூவை நெய்யில் வதக்கி சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கி, மிளகாய், உப்பு, பொட்டுக்கடலை சேர்த்து சட்னியாக அரைக்கலாம்.
பொரித்த அப்பளம் நமுத்துவிட்டால், என்ன செய்யலாம்?
அதை வைத்து பச்சடி தயாரிக்கலாம். அப்பளத்தை மிக்ஸியில் கிள்ளிப் போட்டு ஒரு சுற்று சுற்றி, ஒரு கப் தயிருடன் சேர்த்து... உப்பு, பச்சை மிளகாய், இஞ்சியை அரைத்து சேர்த்தால்... சுவையான அப்பளப் பச்சடி ரெடி. இதை வெங்காயம், கேரட் துருவல், வெள்ளரிக்காய் துருவல் கலந்தும் தயாரிக்கலாம்.

நன்றி: அவள் விகடன்

30 வகை சுண்டல் - நைவேத்தியம்-----நன்றி : அவள் விகடன்...;

ழகுற வீட்டை அலங்கரித்து... அலைமகள், கலைமகள், மலைமகள் மூவரையும் பூஜித்து... அக்கம்பக்கம், உறவு, நட்பு என அனைவருடனும் சேர்ந்து கொண்டாடி மகிழும் நவராத்திரி பண்டிகை, பெண்களுக்கு ஈடு இணயற்ற திருநாள். நவராத்திரி சமயத்தில், மற்றவர்களின் பாராட்டை உங்களுக்கு வாங்கித் தரும் வகையில் '30 வகை சுண்டல் - நைவேத்தியம்’ வகைகளை அள்ளி வழங்குகிறார் சமையல் கலை நிபுணர் நங்கநல்லூர் பத்மா.
''முப்பெரும் தேவியரின் அருளால், உங்கள் இல்லத்தில் தித்திப்பான தருணங்கள் நிரம்பி வழியட்டும்'' என்று பக்திப் பரவசம் பொங்க, பரிவுடன் வாழ்த்துகிறார் பத்மா.
காராமணி இனிப்பு சுண்டல்
தேவையானவை: சிவப்பு காராமணி - ஒரு கப், பாகு வெல்லம் (பொடித்தது) - ஒரு கப், வறுத்துப் பொடித்த எள் - 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: சிவப்பு காராமணியை வறுத்து, இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு குக்கரில் வைத்து, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். வெல்லத்தை தண்ணீர் விட்டு கரைத்து சிறிது கொதிக்கவிட்டு, வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி பாகு காய்ச்சவும். இதை வெந்த காராமணியுடன் சேர்த்து... எள்ளுப் பொடி, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்தால்... காராமணி இனிப்பு சுண்டல் தயார்.

கடலைப்பருப்பு சுண்டல்
தேவையானவை:  கடலைப்பருப்பு - 200 கிராம், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு குக்கரில் வைத்து, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, காய்ந்த மிளகாயை கிள்ளிப் போட்டு... வேக வைத்த கடலைப்பருப்பை தண்ணீர் வடித்து சேர்த்து, உப்பு, தேங்காய் துருவல், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

பார்லி  சாபுதானா சுண்டல்
தேவையானவை: பார்லி, ஜவ்வரிசி, வறுத்த வேர்க்கடலை - தலா 100 கிராம், பொட்டுக்கடலை - ஒரு டீஸ்பூன், வறுத்த முந்திரிப்பருப்பு, பிஸ்தா பருப்பு - தலா 10, இஞ்சி விழுது - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:  பார்லி, ஜவ்வரிசியை நன்கு ஊற வைத்து, தண்ணீர் வடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, இஞ்சி விழுது, மிளகுத்தூள் சேர்த்து, ஊற வைத்த பார்லி, ஜவ்வரிசி, உப்பு சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறவும். இதனுடன் வறுத்த வேர்க்கடலை, முந்திரி, பிஸ்தா, பொட்டுக்கடலை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

பச்சைப் பட்டாணி சுண்டல்
தேவையானவை:  பச்சைப் பட்டாணி - 200 கிராம், துருவிய கேரட் - 2 டீஸ்பூன், கொத்தமல்லித் தழை - சிறிதளவு, தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், கடுகு, எண்ணெய் - ஒரு தலா டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க: தனியா, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று.
செய்முறை:  தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை எண்ணெய் விடாமல் வறுத்துப் பொடித்து வைக்கவும். பச்சைப் பட்டாணியை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து... குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, வேக வைத்த பட்டாணியை தண்ணீர் வடித்து சேர்க்கவும். இதனுடன் கேரட் துருவல், தேங்காய் துருவல், உப்பு சேர்த்து, வறுத்துப் பொடித்ததையும் சேர்த்துக் கிளறி, கொத்தமல்லியைத் தூவி கலந்து பரிமாறவும்.

வேர்க்கடலை சுண்டல்
தேவையானவை:  பச்சை வேர்க்கடலை - 200 கிராம், காய்ந்த மிளகாய் - 2, தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், கடுகு, எண்ணெய் - தலா ஒரு ஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வேர்க்கடலையுடன் உப்பு சேர்த்து, குக்கரில் வேக வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, பெருங்காயத்தூள் சேர்த்து... வேக வைத்த கடலையை தண்ணீர் வடித்து சேர்த்து, தேங்காய் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

பயறு இனிப்பு சுண்டல்
தேவையானவை:  பச்சைப் பயறு - 200 கிராம், வெல்லம் - 150 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன்.
செய்முறை: பச்சைப் பயறை லேசாக வறுத்து, 30 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். வெல்லத்தைப் பொடித்து, நீரில் கரைத்து சிறிது கொதிக்க வைத்து, வடிகட்டி, மீண்டும் அடிப்பில் ஏற்றி பாகு காய்ச்சவும். பாகு கெட்டியானதும் வேக வைத்த பயறை தண்ணீர் வடித்து சேர்த்து, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் போட்டுக் கிளறி இறக்கவும்.

பாசிப்பருப்பு கார சுண்டல்
தேவையானவை:  பாசிப்பருப்பு - 200 கிராம், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், கடுகு, எண்ணெய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 2, உப்பு - தேவையான அளவு.
செய்முறை:  பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு குக்கரில் வைத்து, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து, வெடித்ததும் பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, வேக வைத்த பாசிப்பருப்பை தண்ணீர் வடித்து சேர்க்கவும். பிறகு உப்பு, தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

ஃப்ரூட் சுண்டல்
தேவையானவை:  முளைகட்டிய சோளம், கொய்யாபழத் துண்டுகள், ஆப்பிள் துண்டுகள், பப்பாளிப்பழத் துண்டுகள் - தலா ஒரு கப், உலர் திராட்சை - 10.
செய்முறை: முளைகட்டிய சோளத்துடன் நறுக்கிய கொய்யாப்பழத் துண்டுகள், ஆப்பிள் துண்டுகள், பப்பாளி பழத் துண்டுகள் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, உலர் திராட்சையையும் சேர்த்துக் கலக்கவும்.
குறிப்பு: சுலபமாக செய்யக்கூடிய இந்த சுண்டலில் ருசியும், சத்தும் ஏராளம்!

ரங்கோலி சுண்டல்
தேவையானவை: பச்சைப் பட்டாணி, முளைகட்டிய சோளம், சோயா - தலா ஒரு கப், கேரட் துருவல் - 4 டீஸ்பூன், மாங்காய் (துருவியது) - 2 டீஸ்பூன், இஞ்சி விழுது - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித் தழை - சிறிதளவு, கடுகு, எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சோளம், பட்டாணி, சோயா எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து குக்கரில் வைத்து, தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து வேக வைத்து, ஒரு விசில் வந்ததும் இறக்கி, தண்ணீரை வடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, இஞ்சி விழுது, மாங்காய் துருவல், கேரட் துருவல், வேக வைத்த சோளம், பட்டாணி, சோயா சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். பிறகு நறுக்கிய கொத்தமல்லியை மேலே தூவினால்... ரங்கோலி சுண்டல் ரெடி!

வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்
தேவையானவை:  வெள்ளை கொண்டைக்கடலை - 200 கிராம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, கடுகு, எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க: தனியா, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2.
செய்முறை: கொண்டைக்கடலையை முதல் நாள் இரவு ஊற வைக்கவும். காலையில் நன்றாகக் களைந்து, குக்கரில் வைத்து தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து இரண்டு விசில் விட்டு இறக்கவும். வெறும் வாணலியில் தனியா, காய்ந்த மிளகாய் கடலைப்பருப்பை வறுத்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். வேக வைத்த கடலையை தண்ணீர் வடித்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு சேர்த்து, வெடித்ததும் வேக வைத்த கொண்டைக்கடலையைப் போட்டுக் கிளறி, அரைத்த பொடியை சேர்த்து... பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

பயறு  பனீர் சுண்டல்
தேவையானவை: முளைகட்டிய பச்சைப் பயறு - 2 கப், பனீர் - 10 துண்டுகள், கேரட் துருவல் - 2 டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: முளைகட்டிய பச்சைப் பயறுடன், கேரட் துருவல், நறுக்கிய கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு, உப்பு ஆகியவற்றை சேர்க்கவும். பனீர் துண்டுகளை நெய்யில் பொரித்து இதனுடன் சேர்த்து, மிளகுத்தூள் போட்டு நன்றாகக் கலக்கவும்.

புதினா  கொத்தமல்லி சுண்டல்
தேவையானவை:  புதினா - ஒரு கட்டு, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு, பொடியாக நறுக்கிய கோஸ் - ஒரு கப், வேக வைத்த வேர்க்கடலை - ஒரு கப், முளைகட்டிய பச்சைப் பயறு - ஒரு கப்,  மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புதினாவை ஆய்ந்து நறுக்கவும். கடாயில் நெய் விட்டு புதினா,கோஸ், கொத்தமல்லி சேர்த்து, உப்பு போட்டு வதக்கவும். பிறகு, வேக வைத்த வேர்க்கடலை, முளைகட்டிய பச்சைப் பயறு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

நெய் அப்பம்
தேவையானவை:  கோதுமை மாவு - ஒரு கப், நெய் - 100 மில்லி, தேங்காய் துருவல் - ஒரு கப், அரிசி - 2 டீஸ்பூன், பொடித்த வெல்லம் - ஒரு கப் ஏலக்காய் - 4.
செய்முறை:  தேங்காய் துருவல், அரிசி, வெல்லம் ஆகியவற்றை சேர்த்து, ஏலக்காயை உரித்துப் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இதை கோதுமை மாவுடன் கலந்து, தோசை மாவு பதத்தில் கரைக்கவும். ஆப்பக் கல்லில் நெய் விட்டு, மாவை சிறு கரண்டியில் எடுத்து ஊற்றி, வெந்தவுடன் திருப்பிப் போட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு:  நவராத்திரி பூஜையில் நெய் அப்பத்துக்கு முக்கிய இடம் உண்டு.

மொச்சை சுண்டல்
தேவையானவை:  காய்ந்த மொச்சை - 250 கிராம், தனியா, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, இஞ்சி விழுது - ஒரு டீஸ்பூன், கொப்பரைத் துருவல் - 2 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மொச்சையை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைக்கவும். தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை வெறும் வாணலியில் வறுத்து பொடித்துக் கொள்ளவும். மொச்சையை தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, இஞ்சி விழுதை போட்டு, வேக வைத்த மொச்சையையும் தண்ணீர் வடித்து சேர்க்கவும். இதனுடன் பெருங்காயத்தூள், பொடித்து வைத்த பொடி, கறிவேப்பிலை போட்டு நன்கு கிளறி, இறக்கும் சமயம் கொப்பரைத் துருவல் சேர்த்துக் கலந்து இறக்கவும்.
குறிப்பு: தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை மொத்தமாக பொடித்து வைத்துக்கொண்டும் சுண்டலுக்கு தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.

மல்டி பருப்பு சுண்டல்
தேவையானவை: கடலைப்பருப்பு, பச்சை வேர்க்கடலை, முளைகட்டிய கொள்ளு - தலா ஒரு கப், எள்ளு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, கொப்பரைத் துருவல் - 2 டீஸ்பூன், கடுகு, எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடலைப்பருப்பு, கொள்ளு, வேர்க்கடலையுடன் தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரில் வைத்து இரண்டு விசில் வரும் வரை வேகவிடவும். எள்ளு, காய்ந்த மிளகாயை வறுத்துப் பொடிக்கவும். வேக வைத்த கொள்ளு, கடலைப்பருப்பு, வேர்க்கடலையில் இருந்து தண்ணீரை வடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, எள்ளு - மிளகாய் பொடி, வேக வைத்த பருப்புகள் சேர்த்துக் கிளறவும். அதனுடன் கொப்பரைத் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

கிரிஸ்பி சுண்டல்
தேவையானவை:  முளைகட்டிய பச்சைப் பயறு - ஒரு கப், பொரித்த கார்ன்ஃப்ளேக்ஸ் - ஒரு கப், ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) - 100 கிராம், காராபூந்தி - 100 கிராம், உப்பு - தேவையான அளவு
செய்முறை:  பச்சைப் பயறுடன் தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து ஒரு விசில் வந்ததும் இறக்கவும். பிறகு தண்ணீர் வடித்து, பொரித்த கார்ன்ஃப்ளேக்ஸ், ஓமப்பொடி, காராபூந்தி சேர்த்துக் கலந்து சாப்பிடக் கொடுக்கவும்.

பூந்தி தயிர்வடை
தேவையானவை:  உளுத்தம்பருப்பு - 250 கிராம், புளிப்பு இல்லாத தயிர் - அரை லிட்டர், பச்சை மிளகாய் - 3, நறுக்கிய கொத்தமல்லி, கேரட் துருவல் - தலா 2 டீஸ்பூன், காராபூந்தி - 100 கிராம், எண்ணெய் - 500 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து களைந்து தண்ணீரை வடித்து... உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைக்கவும், வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு எடுக்கவும். வடைகளை வெதுவெதுப்பான நீரில் போட்டு எடுத்து, தயிரில் போடவும். நன்கு ஊறியதும், மேலே பூந்தி, கேரட் துருவல், கொத்தமல்லி தூவவும்.

அவல்  சர்க்கரை புட்டு
தேவையானவை: கெட்டி அவல் - 250 கிராம், நெய் - 4 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, முந்திரிப் பருப்பு - 10, சர்க்கரை - 200 கிராம்.
செய்முறை:  அவலை சிறிது நெய் விட்டு பொன்னிறமாக வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். சர்க்கரையை பொடித்து அதனுடன் சேர்க்கவும். மீதமுள்ள நெய்யில் முந்திரியை வறுத்துப் போட்டு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து சாப்பிடக் கொடுக்கவும்.

எள்ளு சாதம்
தேவையானவை:  பாசுமதி அரிசி - 250 கிராம், எள்ளு - 25 கிராம், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:  அரிசியுடன் ஒரு பங்குக்கு இரு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். எள்ளு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை வறுத்துப் பொடித்து, சாதத்தில் சேர்த்து...  நல்லெண்ணெய், உப்பு சேர்த்துக் கலக்கவும்.
குறிப்பு:  புரட்டாசி சனிக்கிழமையில் இந்த எள்ளு சாதத்தை பெரும்பாலான வீடுகளில் செய்வார்கள்.

தாளிப்பு தயிர் சுண்டல்
தேவையானவை:  முளைகட்டிய கொண்டைக்கடலை - ஒரு கப், முளைகட்டிய பச்சைப் பயறு - ஒரு கப், பொடியாக நறுக்கிய பேபிகார்ன்  - ஒரு கப், கேரட் துருவல் - ஒரு கப், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், சுத்தம் செய்து நறுக்கிய இஞ்சி - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், தயிர் (புளிப்பு இல்லாதது) - 200 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பயறு, கொண்டைக்கடலையை வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, இஞ்சி தாளித்து, கேரட் துருவலை சேர்க்கவும். இதை தயிரில் போட்டு, உப்பு சேர்த்து... வேக வைத்த பயறு, கொண்டைக்கடலை, வதக்கிய பேபிகார்ன், மிளகுத்தூள் சேர்த்து 30 நிமிடம் அப்படியே வைக்கவும். பிறகு கொத்தமல்லி, கறிவேப்பிலையை மேலே தூவி சாப்பிடக் கொடுக்கவும்.
குறிப்பு: ருசியுடன் சத்தும் மிகுந்த இந்த தாளிப்பு சுண்டல், வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. விருப்பப்பட்டால், சிறிது சர்க்கரை சேர்த்துக் கலக்கலாம்.

வாழைப்பழ அல்வா
தேவையானவை: வாழைப்பழம் - 4, சர்க்கரை - ஒரு கப், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரிப் பருப்பு, கேசரி பவுடர் - சிறிதளவு, நெய் - 100 மில்லி.
செய்முறை: வாழைப்பழத்தை நெய் சேர்த்து வதக்கி, நன்கு மசித்துக் கொள்ளவும். அதனுடன் சர்க்கரை, கேசரி பவுடர் சேர்த்து கெட்டியாக கிளறி... வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். அல்வா பதம் வரும் வரை கிளறி இறக்கவும்.

தேங்காய் சாதம்
தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, கடுகு - ஒரு டீஸ்பூன், முந்திரி - 10, நெய் - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.  
செய்முறை: அரிசியுடன் ஒரு பங்குக்கு இரு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். தேங்காய் துருவலை எண்ணெய் விட்டு வறுக்கவும். சிறிதளவு எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலையை தாளிக்க வும். சாதத்தை அகலமான பாத் திரத்தில் போட்டு, உப்பு சேர்த்து, வறுத்த தேங்காய், தாளித்தது ஆகிய வற்றை சேர்த்துக் கலக்கவும். பிறகு, முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.
குறிப்பு: இதில் வறுத்த வேர்க்கடலையும் சேர்க்கலாம்.

பால் பொங்கல்
தேவையானவை: அரிசி - 200 கிராம், பால் - 500 மில்லி, சர்க்கரை - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, முந்திரிப் பருப்பு - 10, நெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை:  அரிசியுடன் ஒரு பங்குக்கு மூன்று பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து 4 விசில் விட்டு இறக்கவும். பாலை சுண்டக் காய்ச்சி, சாதத்துடன் சேர்த்து மசித்து, சர்க்கரை சேர்த்துக் கலந்து கொதிக்கவிட்டு... ஏலக்காய்த்தூள், நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு போட்டு கலந்து, இறக்கவும்.
குறிப்பு:  திராட்சை, பிஸ்தாவை வறுத்து சேர்க்கலாம்.

அன்னாசிப்பழ கேசரி
தேவையானவை:  ரவை - 200 கிராம், சர்க்கரை - 150 கிராம், அன்னாசிப்பழத் துண்டுகள் - ஒரு கப், நெய் - 100 மில்லி, கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, முந்திரிப் பருப்பு - 10.
செய்முறை: ரவையை நெய் விட்டு சிவக்க வறுக்கவும். அன்னாசிப்பழத் துண்டுகளை மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் ஒரு பங்கு ரவைக்கு இரு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு... அன்னாசிப் பழ விழுது சேர்த்து, கொதித்ததும் ரவையை தூவிக் கிளறி வேகவிடவும். நன்கு வெந்ததும், சர்க்கரையைப் போட்டுக் கிளறி... ஏலக்காய்த்தூள், கேசரி பவுடர் சேர்க்கவும். முந்திரியை நெய்யில் வறுத்து இதனுடன் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

தேங்காய்  அரிசி பாயசம்
தேவையானவை:  தேங்காய் துருவல் - ஒரு கப், அரிசி - ஒரு கைப்பிடி அளவு, பொடித்த வெல்லம் - 200 கிராம், காய்ச்சிய பால் - 500 மில்லி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரி - 10, வாழைப்பழம் - ஒன்று.
செய்முறை: அரிசி, தேங்காய் துருவலை சேர்த்து சிறிதளவு நீர் விட்டு கொரகொரப்பாக அரைக்கவும். கடாயில் தண் ணீர் விட்டு அரிசி - தேங்காய் விழுதை சேர்த்து கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். நன்கு வெந்ததும், பொடித்த வெல்லம் சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து கொதித்தவுடன், காய்ச்சிய பாலை சேர்த்து, ஏலக்காய்த் தூள், வறுத்த முந்திரி போட்டு இறக்கவும். வாழைப்பழத்தை பொடியாக நறுக்கி சேர்க்கவும்.
குறிப்பு: கொப்பரைத் தேங் காயை, மெல்லியதாக  நறுக்கி நெய்யில் வறுத்து சேர்க்கலாம். பலாச்சுளையையும் நறுக்கி சேர்க்கலாம்.

காய்கறி வடை
தேவையானவை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா ஒரு கப், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கோஸ் துருவல், கேரட் துருவல் - தலா 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை - சிறிதளவு, பச்சை மிளகாய் - 2, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 250 மில்லி.
செய்முறை:  பருப்புகளை ஒன்றாக ஊற வைத்து, தண்ணீர் வடித்து, உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து கெட்டியாக அரைக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கேரட் துருவல், கோஸ் துருவல் சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: கீரை சேர்த்தும் வடை தயாரிக்கலாம்.

அக்கார வடிசல்
தேவையானவை:  அரிசி - 250 கிராம், வெல்லம் - 250 கிராம், பால் - 500 மில்லி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரிப் பருப்பு - 10, கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை, நெய் - 100 மில்லி.
செய்முறை: அரிசியுடன் ஒரு பங்குக்கு நான்கு பங்கு என்ற அளவில் பால் தண்ணீர் விட்டு வேக வைக்கவும். வெல்லத்தைக் கரைத்து, சிறிது கொதிக்கவிட்டு வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி பாகு வைத்து கெட்டியானதும், சாதத்துடன் கலந்து மசிக்கவும். அதனுடன் வறுத்த முந்திரி, நெய், ஏலக்காய்த்தூள், கேசரி பவுடர் சேர்த்துக் கலக்கவும்.

ஜவ்வரிசி பாயசம்
தேவையானவை: ஜவ்வரிசி - 100 கிராம், சர்க்கரை - 150 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, முந்திரிப் பருப்பு - 10, காய்ச்சிய பால் - 500 மில்லி.
செய்முறை:  ஜவ்வரிசியை நன்றாக வேக வைக்கவும். வெந்தவுடன் சர்க்கரையை சேர்க்க வேண்டும். பின்பு காய்ச்சிய பாலைக் கலந்து, கெட்டியாகும் வரை கிளறவும். அதனுடன் ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி சேர்த்துக் கிளறி, இறக்கவும்.
குறிப்பு: சர்க்கரைக்குப் பதில் வெல்லம் சேர்த்தும் தயாரிக்கலாம்.

உக்காரை
தேவையானவை:  கடலைப்பருப்பு - ஒரு கப், துவரம்பருப்பு - ஒரு கப், வெல்லம் - 150 கிராம், நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு - 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பை ஊற வைத்து தண்ணீர் வடித்து கெட்டியாக அரைக்கவும். வாணலியில் வெல்லத்தைப் பொடித்துப்போட்டு சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி, கெட்டியாக பாகு காய்ச்சிக் கொள்ளவும். இட்லித் தட்டில் சிறிது நெய் தடவி, அரைத்த பருப்பை வைத்து ஆவியில் வேகவிட்டு எடுத்து, ஆறிய உடன் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றினால்... உதிரி உதிரியாக வரும். இதனுடன் பாகு சேர்த்து நன்கு கலந்து, ஏலக்காய்த்தூள், முந்திரிப் பருப்பு சேர்க்கவும்.
குறிப்பு: இது பாரம்பரியம் மிக்க இனிப்பு வகைகளில் ஒன்று.

பாதாம்  தேங்காய் பர்ஃபி
தேவையானவை: பாதாம் பருப்பு - 10, நெய் - 4 டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு கப், சர்க்கரை - 100 கிராம், ரவை - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: தேங்காய் துருவல், பாதாம் பருப்பை சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். சர்க்கரையுடன் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து, காய்ந்ததும் அரைத்த தேங்காய் விழுது, ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் விட்டு கிளறி, ரவை தூவி... கெட்டியானதும் நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறிய உடன் துண்டுகள் போடவும்.
குறிப்பு: முந்திரியை சேர்த்து அரைத்தும் தயாரிக்கலாம்.
தொகுப்பு: பத்மினி 
 படங்கள்: எம்.உசேன்  
ஃபுட் டெகரேஷன்: 'செஃப்’ ரஜினி

Thursday, April 18, 2013

கோட்டுக்கறி குழம்பு


தேவையான பொருட்கள்:

துவரரிசி - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம் (குழம்பில் போட)
பச்சைமிளகாய் - 10 மிளகாய்
பீன்ஸ் - 10 எண்ணிக்கை
உருளைகிழங்கு - 2 கிழங்கு
காரட் - 1
வாழைக்காய் - 1
மரவள்ளிகிழங்கு - 1/2 கிழங்கு
கரனகிழங்கு - 1 கிழங்கு
பரங்கிக்காய் - 1/2 கீற்று
சீரகம் - 50 சீரகம்
பச்சரிசி - 50 கிராம்
மஞ்சள் - 1/2 வில்லு
புளி - 2 எண்ணிக்கை
தக்காளி - 2 எண்ணிக்கை
பெருங்காயம் - 5 கிராம்
கடலைஎண்ணெய் - 50 மில்லி (தேவைகேற்ப)
கடுகு - 1 தேக்கரண்டி
பட்டமிளகாய் - 4 எண்ணிக்கை
கருவேப்பில்லை - 1 கொத்து
மல்லி தழை - 1 கொத்து
சின்ன வெங்கயாம் - 5 எண்ணிக்கை (தாளிப்பதற்கு)

சமைக்கும் முறை:
  1. பச்சரிசி, மஞ்சள், சீரகம் மூன்றையும் நன்றாக வறுத்து அம்மியில் வைத்து பொடியாக அடித்து கொள்ளவும்.
  2. துவரரிசியை வேக வைக்கவும்.
  3. வெந்தவுடன் பச்சைமிளகாய், வெங்காயம் நறுக்கி அதனுடன் வேக வைக்கவும்.
  4. வெந்த பின் காரட், பீன்ஸ், வாழைக்காய், மரவள்ளிகிழங்கு, கரனைகிழங்கு, பரங்கிக்காய், உருளைகிழங்கு ஆகியவற்றை சேர்த்து வேகவிடவும்.
  5. இதனுடன் புளியை கரைக்கவும்.
  6. செய்முறையில் முறை 1 இல் உள்ள பொடியை சேர்க்கவும்.
  7. நன்றாக கிளறி குழம்பை கொதிக்க விடவும்
  8. வேறொரு சட்டியில் இதமான சூட்டுடன் எண்ணையை ஊற்றி கடுவுனை சேர்த்து கடுகு வெடிக்கும் வரை காத்திருக்கவும்.
  9. கடுகு வெடித்த பிறகு பட்டமிளகாய், வெங்காயம் மற்றும் பெருங்காயபொடி இவற்றை சேர்த்து வதக்கவும்.
  10. வதக்கியபிறகு கருவேப்பில்லை, மல்லி கொத்தை போடவும்.
  11. தாளித்த இவைகளை முன்பு கொதிக்க விட்ட குழம்பில் சேர்க்கவும்.
  12. சுவையான காசாங்காடு கிராம தை பொங்கல் கோட்டுகறி குழம்பு தயார்.

தாவரங்கள் மூலிகைகள் மரங்கள்

 கிராமத்தில் விளையும் மூலிகைகளும் /  தாவரங்களும் / மரங்களும் மற்றும் அதன் தாவரவியல் பெயர்களும்.

நம் ஊரில் விளைய கூடிய செடிகள் / மூலிகைகள் / மரங்கள் விடுபட்டிருப்பின் இணைய குழுவின் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தோட்டகலை பற்றி வேளாண் பல்கலைகழக இணைய தளம் - http://agritech.tnau.ac.in/ta/horticulture/horti_index_ta.html

இந்த மூலிகைகள் நாட்டு (பாட்டி) வைத்திய முறைகளில் எவ்வாறு பயன்படுகிறது என்பதை பகிர்ந்து கொள்ளுங்கள். 


அரசமரம் Ficus religiosa 
அரளிப்பூ Nerium oleander 
அருகம்பில்லு Cynodon dactylon 
ஆரஞ்சு மரம் Orange (Citrus Sinensis) 
ஆலமரம் Ficus benghalensis Linn (Banyan)  
உளுந்து (உளுத்தம் பருப்பு) Vigna mungo (Black Gram)  
எலுமிச்சை Citrus limon (Lemon) 
எள் Sesamum indicum 
கத்திரிக்காய் Solanum melongena 
கரும்பு Saccharum officinarum 
கறிவேப்பிலை Murraya koenigii (Curry Leaves) 
காட்டாமணக்கு (புங்கை மரம்) Millettia pinnata 
கிளுவை Commiphora beryii 
கொய்யா Psidium guajava 
கோவக்காய் Tindora 
சந்தனம் Santalum paniculatum (SandalWood) 
சப்பாத்தி கள்ளி PRICKLY PEAR cactus 
சப்போட்டா மரம் Manilkara zapota 
சவுக்கு Casuarina 
செம்பருத்தி Hibiscus rosa-sinensis 
துளசி Ocimum sanctum (Tulsi) 
தூதுவாழை Solanum trilobatum  
தேக்கு Tectona grandis (Teakwood) 
தேங்காய் Coconut 
நார்த்தங்காய் Citrus medica (Citron) 
நீலகிரி(அ) கற்பூரத்தைலமரம் Eucalyptus 
நெல் / அரிசி Oryza sativa (Rice) 
பப்பாளி Carica papaya 
பனை Arecaceae 
பாவைக்காய் Bitter Gourd (Momordica charantia) 
பிலா Artocarpus heterophyllus (Jackfruit)  
புளி Tamarindus indica (Tamirind)  
மணத்தக்காளி Solanum nigrum 
மிளகாய் Chili pepper 
முசுமுசுக்கை Mukia Maderas Patana 
முருங்கை Moringa oleifera 
முளைக்கீரை Amaranth Leaves  
மூங்கில் Bamboo 
ரோஜா Rose 
வெண்டைக்காய் Abelmoschus esculentus 
வேம்பு Azadirachta indica